இட்லி-க்கு பீர்க்கங்காய் வெங்காயம் சட்னி சுவையா இருக்கும் - செஞ்சு பாருங்க Skip to main content

இட்லி-க்கு பீர்க்கங்காய் வெங்காயம் சட்னி சுவையா இருக்கும் - செஞ்சு பாருங்க

 

இட்லி-க்கு பீர்க்கங்காய் வெங்காயம் சட்னி சுவையா இருக்கும்  - செஞ்சு பாருங்க 




தேவையானவை 

எண்ணெய் - 3 கரண்டி 
கடுகு -1/4 ஸ்பூன் 
உளுந்து - 1/4 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
பெருங்காயம் - (சிறுது )
கறிவேப்பில்லை - (சிறுது )
வரமிளகாய் - 4
பச்சைமிளகாய் - 2
பீர்க்கங்காய் - 4
பெரியவெங்காயம் - 6
பூண்டு -4 (சிறுது )
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன் 
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
காய்ஞ்ச வெந்தய இலை -(சிறுது )
புளி - (சிறுது )
அரிசி மாவு - 1 1/2 ஸ்பூன்  (தண்ணீரில் காலந்தது )
தண்ணீர் - 3 கப் 


செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

கடுகு, சீரகம், பெருங்காயம், உடைத்த காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒவ்வொன்றாக நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

                                        


நறுக்கிய வெங்காயத்தை நடுத்தர அளவில் வதக்கவும்.அதனுடன் பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும் உப்பும் சேர்க்கவும் .

                                       


தக்காளி மற்றும் பூண்டு சேர்க்கவும்.பீர்க்கங்காய்-யை குறைந்த தீயில் 3 நிமிடம் சமைக்க மூடி வைக்கவும்

பிறகு, புளி தண்ணீர் சேர்க்கவும்.

மிளகாய் தூள் மற்றும் காஷ்மீரி தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.பின் புளி தண்ணீர் சேர்க்கவும்


                                          

தண்ணீர் சேர்த்து மூடியை மூடவும்

பீர்க்கங்காய் வெந்ததும் அரிசி மாவு தண்ணீர் சேர்க்கவும்.

                                           

கடைசியாக சட்னியில் சிறிது வெல்லம் சேர்த்து இட்லியுடன் பரிமாறவும்.


Comments