வெற்றிலையில் உள்ள மகத்தான சில மருந்துவத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே வெற்றிலை - கொடி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை , கற்பூர வெற்றிலை , சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை . நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. வெற்றிலை-யில் சில மகத்தான மருந்துவம் :- தலை வலி:- தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். பெரும்பாலான மக்களுக்கு, அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கோ, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், மற்ற வகையான உடல் நல பிரச்சனைகளாலும், சிலருக்க...