டிப்ஸ் 1:
வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
டிப்ஸ் 2:
சமையலறை டிப்ஸ்: ஒரு டம்பளர் தண்ணீரில் நான்கு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.டிப்ஸ் 3:
எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரச கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.டிப்ஸ் 4:
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
டிப்ஸ் 5:
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.
டிப்ஸ் 6:
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால் கண்களில் எரிச்சல் இருக்காது.டிப்ஸ் 7:
சமையல் மேடையின் எண்ணெய் பிசுக்கை போக்க கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் பிசுக்கு போகும்.
டிப்ஸ் 8:
ஞாயிற்று கிழமை என்றதும், எல்லோரின் நினைவில் வருவதும் மீன், சிக்கன் மட்டன் வறுவல் தான், பெரும்பாலான இல்லத்தரசிகளின் வீட்டில், தோசைக்கல்லில் தான் பொரிப்பது வழக்கம்.
அப்படி, பொரித்து எடுத்த பிறகு அந்த கடாயில் பிசுக்கு போக முதலில் கோதுமை மாவு அல்லது
மைதா மாவு அல்லது கான்பிளவர் மாவு தூவி விட்டுஒரு பேப்பரோ டிஷ்யூ பேப்பரை வைத்து துடைத்து
எடுத்துவிடுங்கள். அதன் பின்னர் தேய்த்து கழுவினால் ஈஸியான இருக்கும்.
டிப்ஸ் 9:
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றியவுடன் அந்த தண்ணீரில் சிறிது துண்டு, எலுமிச்சை பழத்தை போட்டு விடுங்கள். அப்படி, செய்தால் இட்லி பாத்திரத்திற்கு அடியில் தண்ணீர்
கொதித்துக் கொதித்து கறை படித்து இருக்காது. இட்லி பாத்திரம் அடியில் எப்போதும் புதுசு போலவே இருக்கும்.
டிப்ஸ் 10:
முட்டையை உடைத்து பாத்திரத்தில் போட்டு கலக்கும் சமயம், சில சமயம் முட்டையுடன் சின்னதாக முட்டை ஓடு கலந்துவிடும். அந்த குட்டி முட்டை ஓட்டை எடுப்பது மிகவும் சவாலாக இருக்கும்.கையில் எடுத்தாலும் வராது. எனவே, இனிமேல் நீங்கள் உங்களுடைய கை விரலை தண்ணீரில் நனைத்து விட்டுஅதன் பின்பு அந்த முட்டை ஓட்டை விரல்களால் எடுத்து
பாருங்கள். விரலில் சுலபமாக வந்துவிடும்.
Comments
Post a Comment