📝 தேவையானவை: அரிசி மாவு - 1 கப் தண்ணீர்-1 1/2 டம்ளர் வெல்லம் பொடித்தது - 1/4 கப் தேங்காய் துருவல் 1 1/2 கப் நெய் ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் பூரணம்: ஒரு வாணலியில் வெல்லம் , தேங்காய் துருவல் போடுங்க.சேர்தாப்ள கிளறி விடுங்க, வெல்லம் உருகியதும் ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைச்சிடுங்க. பாகு பதம் நல்லா சேர்ந்த பிறகு (லைட் ப்ரவுன் கலர்-ல இருக்கனும்) அடுப்பை அமத்திருங்க. மாவு செய்முறை: ஒரு வாணலியில் 2டம்ளர் தண்ணீரில், உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்த நீரில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி அல்லது கம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்க உங்க உள்ளங்கையில நெய் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத...