ஸ்வீட் சீப்பு முறுக்கு என் குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும், ஏனெனில் இது மிதமான இனிப்புடன் ஒரு பூ டிசைன் முறுக்கில் வரைந்து இருக்கும். நான் அதை விரும்பி சாப்பிடுவேன், எப்பொழுதும் பண்டிகையின் போது என் பாட்டி அதை தயார் செய்து என் வீட்டிற்கு அனுப்புவார். அவர்கள் தம்பிக்கோட்டையிலும், நான் புதுக்கோட்டையிலும் குடியிருந்தோம். இன்று நான் உங்களுக்காக என் பாட்டி செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன். சமைத்துப் பார்த்து விட்டு கமெண்ட்ஸ் பண்ணுங்க. தேவையான பொருட்கள் : பச்சை அரிசி மாவு - 1 படி பாசிப்பருப்பு மாவு - 1/4 படி அரை தேங்காய் பால் உப்பு சர்க்கரை - 6 ஸ்பூன் இனிப்பு சீப்பு முறுக்கு செய்வது எப்படி: ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு மற்றும் மஞ்சள் உளுந்து தூள் சேர்க்கவும். அதை மாவாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் குறைந்த தீயில் வைத்து, தேங்காய்ப்பால், நெய், சர்க்கரை சேர்த்து தேங்காய் பாலில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். பாலை அதிக நேரம் சூடாக்க வேண்டாம்.தேங்காய் பாலை அதிகம் காய்ச்ச வேண்டாம், அது தயிராக மாறும். மாவில் தேங்காய் பால் மற்றும...
Easy recipes for beginners